சேலம் தேவாங்கபுரம் விரிவாக்க தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தநிலையில் அந்த பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தால் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு போகிறார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவிலலை. தினமும் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-அருள், தேவாங்கபுரம், சேலம்.