கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. மேலும் அங்கு தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் பிடிக்க வருபவர்கள் அச்சத்துடனே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-பாலாஜி, ஓசூர்.