பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2022-09-19 16:44 GMT

சேலம் மாவட்டம் கருப்பூர் 5-வது வார்டு பரவைகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக பராமரிப்பில்லாமல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த தண்ணீர் தொட்டியில் பல்லி, தவளை, பூச்சிகளும் கிடக்கின்றன. இந்த தண்ணீரை குடிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்சித், சேலம்.

மேலும் செய்திகள்