நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பிடாகை வடக்கு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம் ஆனால் கடந்த சில மாதங்களாக தொட்டியை சுத்தம் செய்யாமல் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.