திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா 57 .குல மாணிக்கம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. நீர்த்தேக்க தொட்டியின் அருகே அங்கன்வாடி, பள்ளி, கோவில் ஆகியவை உள்ளன. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சேதமடைந்து அபாயநிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிய நீர்த்தேக்கதொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.