தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மல்லாபுரம் செல்லும் சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமி, மல்லாபுரம், தர்மபுரி.