மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிசேகக்கட்டளை கிராமம் உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உரிய பராமரிப்பின்றி சேதம் அடைந்துகாணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள ஆபத்தான மேல்நிலை உயர்த்திக்க தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.