ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் பின்புறம் உள்ள வீதியில் குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதமாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. மேலும் குடிநீர் வெளியே வரும்பொழுது மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யவேண்டும்.