வீணாகும் குடிநீர்

Update: 2022-09-14 15:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள காரகுப்பத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஒகேனக்கல்லில் இருந்து பெரிய குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது அந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாகுவதை தவிர்க்க வேண்டும்.

-பரணி, காரகுப்பம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்