தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள கூலன் கொட்டாய் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அதற்கு மோட்டார் பொருத்தாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு மோட்டார் பொருத்தி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-மாரியப்பன், கூலன்கொட்டாய், தர்மபுரி.