கோபி மொடச்சூர் கருக்கம்பள்ளி ரோடு வழியாக தடப்பள்ளி-அரக்கன்கோட்டை கொப்பு வாய்க்கால் செல்கிறது. இதிலுள்ள தண்ணீர் விவசாய நிலத்துக்கு செல்லாமல் வழிந்து அருகே உள்ள ரோட்டில் ஓடுகிறது. இதனால் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அந்த பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் தண்ணீரில் வழுக்கி கீழே விழுந்த வண்ணம் உள்ளனர். எனவே வாய்க்கால் தண்ணீர் ரோட்டில் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.