மதுரை மாவட்டம் 86-வது வார்டு காசிமான் தெரு சாமியார் சந்தில் உள்ள உப்பு நீர்க் குழாய்களில் பல வருடங்களாக தண்ணீர் வினியோகிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உப்பு தண்ணீர் வினியோகித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.