மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு உள்ளது. இந்த ஆற்றின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆற்றில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதுடன், ஆற்றில் அதிக அளவில் ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளன. இவை ஆற்றில் தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாஸ்கரன்-