ஈரோடு பெருந்துறை ரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. மேலும் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரும் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு் வருகிறார்கள். உடனே குழாய் உடைப்பையும், பாதாள சாக்கடை உடைப்பையும் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.