ஈரோடு குப்பைக்காடு பிரிவு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.