நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து நடுக்கடை வரை சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சேதமடைந்த சாலைகளை பெயர்த்து எடுக்கும் பணியில் லாரிகள், பொக்லின் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்ந நிலையில் பணி இல்லாத நேரங்களில் லாரிகள், பொக்லின் எந்திரங்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த நடவடிக்கை எடுப்பார்களா?