குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-06 11:33 GMT

மயிலாடுதுறை பகுதி முடிகண்டநல்லூர் ஊராட்சி வக்காரமாரி கிராமத்தில் அய்யனார்கோவில் குளம், வாய்க்கால் உள்ளது. இவை கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் குளம், வாய்க்கால்களில் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வீணாக வயல்வெளிகளுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதமடைய செய்கின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமத்தில் உள்ள குளம் மற்றும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்