கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி முல்லை நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் வீடுகளை சூழ்ந்து சாலைகளில் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் விஷ பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதி அடைகின்றனர். எனவே இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், முல்லை நகர், கிருஷ்ணகிரி.