ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2022-09-05 14:04 GMT

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கரூர் பாளையம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது . இந்த தொட்டியை தாங்கி நிற்கும் 4 தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது . குறிப்பாக ஒரு தூணின் அடி மட்டத்தில் கான்ங்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு மிக மோசமாக உள்ளது . இது தொட்டியில் நிரப்பப்படும் நீரின் எடை தாங்காமல் கம்பிகளில் வளைவு ஏற்பட்டு முறிந்து விடக்கூடிய சூழ்நிலையில் தொட்டி கீழே விழக்கூடிய நிலை ஏற்படும் . இது அந்த பகுதியில் நடமாடும் பொதுமக்கள், பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள் உட்பட பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விட கூடிய சூழ்நிலை உள்ளது . எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் தொட்டியின் தூண்களை வலிமைபடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்களும் , பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்