திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் உள்ள குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.