நிழற்குடையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-05 12:05 GMT

கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது பயணிகள் நிழற்குடையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் நீண்ட நேரம் நின்று கொண்டே பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்