குடிநீரை வீணாக்கலாமா?

Update: 2022-09-04 16:47 GMT

கிருஷ்ணகிரி நகரில் சாலையோரம் மற்றும் தெருக்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சில இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதால் தொட்டி சேதமடைந்து குடிநீர் வீணாகுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செழியன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்