மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-03 16:33 GMT

ஓசூர் புறநகர் பகுதியில் தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி. தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்கு எதிரே செல்லும் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. தண்ணீர் வெளியேற கால்வாய்கள் இல்லாததால் இவ்வாறு சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையோரம் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-செந்தில்குமார், ஓசூர்.

மேலும் செய்திகள்