தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பிரதான சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்தநிலையில் சாலையோரத்தில் ஆபத்தான முறையில் குடிநீர் இணைப்பு குழாய் உள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி இந்த குழாயில் வாகனங்கள் மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாலையோரத்தில் உள்ள குடிநீர் குழாயை ேபாக்குவரத்துக்கு இடையூறு இ்ல்லாமல் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், ஏரியூர், தர்மபுரி.