தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் முனியப்பன் கோவில் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் குடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் ஆழ்துளை கிணறுக்கான மோட்டார் பழுதானதால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பயன்படாமல் உள்ளது. இதனால் போதிய தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறுக்கான மோட்டாரை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-வீரமணி, பாலக்கோடு.