ஈரோடு நகரின் அடையாளமான பன்னீர் செல்வம் பூங்காவின் பின்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 4 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அந்த இடத்தில் பல கேபிள்களும் கிடக்கின்றன. அவைகளும் தண்ணீரில் நனைந்து வீணாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை உடனே சீரமைக்கவேண்டும்.