கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிப்பட்டி ஊராட்சி திப்பம்பட்டி கிராமத்தில் 50 வீடுகள் உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அருகிலுள்ள விவசாய கிணறுகளை தேடிசென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த கிராமத்திற்கு குடிநீர் வசதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், திப்பம்பட்டி, கிருஷ்ணகிரி.