திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை-சரவணப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் கழிவுநீருடன், மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க மழை நீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.