திருவெண்ணெய்நல்லூர் அருகில் ஆமூரில் வடிகால் வாய்க்கால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் வடிய வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. மேலும் சாலையிலும் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.