செய்தி எதிரொலி

Update: 2022-08-29 11:58 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை புதுத்தெரு மற்றும் கோவில்தெரு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த தெருக்களில் புதிதாக குழாய்கள் இனைப்பு கொடுத்ததால் பழைய குழாய்கள் பயனற்று போய் அவற்றிலும் குடிநீர் வருவதில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்