கோவை-மேட்டுப்பாளையம் சாலை 14-வது வார்டு வெள்ளைக்கிணர் பிரிவு அருகே மாநகராட்சியின் உப்பு நீர் வினியோக வால்வு மற்றும் அத்திக்கடவு குடிநீர் வினியோக வால்வு உடைந்து ஒரு மாத காலமாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, வீணாகும் தண்ணீரை தடுக்க வேண்டும்