ஆபத்தான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-08-27 16:32 GMT


தஞ்சாவூர் வட்டம் மேலவெளி ஊராட்சி களிமேடு கிராமத்தில் பூதலூர் செல்லும் சாலையில் நியாயவிலைக் கடை அருகில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும்,

பொதுமக்களும் இப்பகுதியை அச்சத்துடனேயேகடந்து செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையிலுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய குடிநீர்தொட்டி அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களிமேடு, பொதுமக்கள்

மேலும் செய்திகள்