தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 7-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட்டார் பழுதடைந்து காணப்படுகிறது. நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி இதே நிலையில் காணப்படுவதால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்மோட்டாரை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்திபன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.