மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-27 15:57 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதனஅள்ளி பஸ் டெப்போ பகுதியில் உள்ள பென்னாகரம்-தர்மபுரி செல்லும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியாமல் சிலர் அதில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருமலை, பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்