புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே பொன்னம்பட்டி கிராமத்தில் உள்ள குளத்துக்கரையின் மேல்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சேதமடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. எனவே, சேதமடைந்த குடிநீர் தொட்டியை மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.