திருச்சி மாவட்டம், புதூர் 55-வது வார்டு தெற்கு யாதவர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.