சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த ஆனையாம்பட்டி புதூர் கிராமத்தில் தண்ணீர் குழாய்களில் முறையாக வருவதில்லை. ஆழ்துளை கிணற்றில் இருக்கும் மின் மோட்டார் பழுதடைந்து மாதங்களாக அப்படியே இருக்கிறது. இது பற்றி பல முறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் பயனில்லை. மேலும் தண்ணீர் டேங்க் ஆபரேட்டர்கள் தங்கள் பணிகளை செய்வதில்லை. எனவே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து தினமும் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.