கோவை மாநகராட்சி 100-வது வார்டு போத்தனூர் அருகே சீனிவாச நகரில், நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதன் காரணமாக சாலை சேதம் அடைந்து வருகிறது. ேமலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.