திருச்சி பீமநகர் மேல கொசத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீருக்காகவும், அன்றாட தேவைகளுக்காகவும் இப்பகுதியில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் அடிபம்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழியின்றி அருகே தேங்கி நின்று சாக்கடையாக மாறியுள்ளது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.