நீரேற்று நிலையம் அமைக்கலாமே!

Update: 2022-08-24 14:44 GMT

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த பெரியப்பட்டி ஊராட்சியில் விவசாயமே தொழிலாக உள்ளது. இந்தநிலையில் பெரியப்பட்டிக்கு அருகே தென்பெண்ணை ஆறும், கல்லாறும் சேறும் இடத்தில் நீரேற்று நிலையம் அமைத்து குழாய் வழியாக பெரியப்பட்டி ஊராட்சியில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன்மூலம் விவசாயிகள் அதிக விளை பொருட்கள் பெற பெரும் உதவியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாலகிருஷ்ணன், பெரியப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்