தர்மபுரி மாவட்டம் பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியின் மேல்மூடி உடைந்து பல மாதங்களாக கிடப்பதால், கிராம மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரில் பறவைகள் எச்சம் மற்றும் மழைநீரும் கலந்து வருகிறது. இ்ந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். எனவே குடிநீர் தொட்டிக்கு புதிய மூடியை அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், பச்சியப்பன்கொட்டாய், தர்மபுரி.