சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து வட்டமுத்தாம்பட்டி புது காலனி 1 மற்றும் 2 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியின் கான்கிரீட் தூண்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இருந்தது. எனவே அந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை அடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி புதிய தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.