தனியார் பஸ்கள் நேரக்காப்பாளர் அறை அமைக்கப்படுமா?

Update: 2023-08-23 17:13 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் சேவை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் தனியார் பஸ்களுக்கான நேரக்காப்பாளர் அறை ஒன்று அமைக்க வேண்டும். தற்போது பயணிகள் தனியார் பஸ்கள் குறித்த தகவல்களை எங்குக் கேட்பது என்ற குழப்பம் உள்ளது? எனவே, தனியார் பஸ்களுக்கான நேரக்காப்பாளர் அறை அமைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராம்பாபு, சத்துவாச்சார 

மேலும் செய்திகள்