திருப்பத்தூரில் இருந்து எடுத்து நரவந்தம்பட்டி கிராமத்துக்கு தடம் எண்:டி30 என்ற டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் அந்தப் பஸ்சை நிறுத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை அந்தப் பஸ்சை மீண்டும் இயக்கவில்லை. இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு வர பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்குவார்களா?
-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.