ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ஆற்காடு. அங்கிருந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் சென்று வர பஸ் வசதி உள்ளது. ஆற்காடு அண்ணா சிலை அருேக பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இங்கு பயணிகள் நிழற்கூடம் கிடையாது. பயணிகள் அங்குள்ள கடைகளின் முன்பு மழை, வெயிலுக்கு ஒதுங்கி பஸ்சுக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஆற்காடு அண்ணா சிலை அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
-வெங்கட்ரமணா, ஆற்காடு.