போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-07-11 17:09 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதிநகர், பழைய பஸ் நிலையம், அரக்கோணம்-சோளிங்கர், காஞ்சீபுரம் சாலை மேம்பாலங்கள் சந்திப்பு மற்றும் எஸ்.ஆர். கேட் ஆகிய பகுதிகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அந்த சிக்னல்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. சிக்னல் விளக்குகள் சில இடங்களில் எப்போதுமே ஒளிர்ந்தபடியே உள்ளது. ஒருசில சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

-கண்ணபிரான், அரக்கோணம்

மேலும் செய்திகள்