காட்பாடி-பாகாயம் இடையே 21 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு 8.30 மணிக்கு மேல் காட்பாடியை நோக்கி வரும் டவுன் பஸ்கள் பெரும்பாலும், அவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. அந்தப் பஸ்கள் 5 நிமிடத்தில் 5 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகின்றன. இதனால் பயணிகளுக்கு பயன்படாத நிலை உள்ளது. எனவே டவுன் பஸ்களை உரிய நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, செங்குட்டை.