பெரியநாயக்கன்பாளையத்தில் எல்.எம்.டபிள்யூ. பிரிவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும்.