புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மகளிர் கல்லூரி செல்லும் சாலையில் அதிகளவில் சாலையோர கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.