வருசநாட்டில் இருந்து கண்டமனூர் செல்லும் சாலையில் பல இடங்களில் ஆபத்தான வளைவுகள் இருக்கின்றன. அந்த பகுதிகளில் சோலார் மூலம் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பழுதடைந்த நிலையில் உள்ள எச்சரிக்கை விளக்குகளை விரைந்து சரிசெய்ய வேண்டும்.